எனதிருபதில் உனது ரௌத்திரம் பிடித்தது
இருபத்தி இருபதில் உன்னைப் புதிராய்ப் பார்க்கிறேன்
மனதிருக்கத்தில் கேட்கிறேன்…
காளி அல்ல உனதவள்
கண்ணம்மா நிஜத்தில் நலமா ?
புதுமைப் பெண்ணைக் காண நினைத்தாயே, இப்புவிக்கு
புத்தி, உணர்வு கொண்ட ஆண்கள் தேவை அல்லவா?
மாற்றம் ஒன்றே மாறாத நியதியில்
இனி ஒரு விதி செய்து, எப்படி
எந்நாளும் காக்க இயலும்?
தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை எனில்
ஜெகத்தை ஏன் அழிக்க வேண்டும்?
ஜாதிகள் ஒழித்து உழுது உண்ணலாம் அல்லவா?
உனது புத்தகம் தூங்கும் எனது பெட்டியில்தான்
எனது பட்டமும் தூங்குகிறது..
புதுமைக் காணவும் மனமில்லை
பெண்ணியத்திலும் நம்பிக்கை இல்லை.
பெண்ணாக பிறந்து வழி காட்டு.
– ராணி